இன்றைய சிந்தனை

பல வேளைகளில் ஒருவர் நம்மை நேசிக்கிற அன்பை மட்டுமே பார்த்து, அவரிடம் அடைக்கலம் புகுகிறோம். அவரிடம் தேவபயம் இருக்கிறதா? என்பதைப் பற்றி நமக்கு அக்கறை இல்லாமற் போய்விடுகிறது; அவ்வாறு செய்வது பெரிய தவறு.

இன்றைய சிந்தனை

அநேக நேரங்களில் நம்முடைய தேவைகளே நம்மை நடுங்கச் செய்து, நாடச்செய்து, நம்முடைய ஜெபங்களையும் அதற்கு நேராக வழிநடத்தி, தேவனுடைய தேவைகளைக் காணக்கூடாத வண்ணம் நம்மை மாற்றிவிடுகின்றன.

இன்றைய சிந்தனை

மாற்றங்களே நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வளர்ச்சியைக் கொண்டுவருகின்றன. Changes can bring progress

இன்றைய சிந்தனை

தான் ஒருவனாக வேலையைச் செய்துமுடித்துவிடமுடியாது, *மற்றவர்களுடன் இணைந்துதான் செய்யவேண்டும்* என்பதை அறிந்துகொண்டவனே சரியான தலைவன்.

இன்றைய சிந்தனை

தேவன் தந்த ஆசீர்வாதங்களை தேவனுக்காக பலிபீடத்தில் வைக்கத் துணியாததினாலேயே, பலர் ஆசீர்வாதங்களை இழந்து நிற்கின்றனர்.

இன்றைய சிந்தனை

தனக்காக மட்டும் கற்கிறவன், குருவிடமிருந்து கற்றுக்கொள்கிறான். “பிறருக்கும் போதிக்கவேண்டுமே என்ற நோக்கத்தோடு கற்றுக்கொள்கிறவன்‌ குருவினிடமிருந்து பெற்க்றுக்கொள்கிறான்.”

இன்றைய சிந்தனை

இந்த உலக வாழ்க்கையின் தேவைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் செய்திகள், நம்முடைய காதுகளுக்கும் இருதயத்திற்கும் ஒருவேளை இன்பமாக இருக்கலாம்; ஆனால், நம்மைக் கரைசேர்ப்பதற்கு அவைகளுக்குப் பெலனில்லை.

இன்றைய சிந்தனை

பாடுகளில்லாத பாதை, கடினமில்லாத பயணம் இவற்றையே நாம் நாடுகின்றோம். வெற்றியை விரும்பாதவர் இல்லை, ஆசீர்வாதத்தை அணைத்துக்கொள்ளத் துடிக்காதவரும் இல்லை; ஆனால், ஒன்றை மறந்துவிடக்கூடாது, குழப்பமில்லாதபோது, குத்திப் பேசுவோர் இல்லாதபோது, நமது உணர்வுக்கூர்மையை இழந்து, நமது இருதயம் மரத்துப்போவதற்கான வாய்ப்பு உண்டு.

Thought Of The Day

Without a leader there may be *noise* but no *voice*.

இன்றைய சிந்தனை

உங்களுடைய வாழ்வு முறை, நீங்கள் பிறருக்கு அளிக்கிற காரியங்கள் போன்றவை *பிறருக்கு ஆவியிலே முன்னேற இடறலாக இருக்குமானால்,* கர்த்தர் கண்டிப்பாக இருப்பது மட்டுமல்ல, இதை மனதில் வைத்திருப்பார், மறக்கமாட்டார்.